காட்டுமன்னார்கோவில், செப். 29: காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள கக்கன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி சங்கீதா (45). இவர் நேற்று வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் பின்னால் இருந்து வந்த மர்ம நபர் ஒருவர், சங்கீதாவின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சங்கீதா கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து, தப்பியோட முயன்ற அந்த நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சையத் அப்சல் மற்றும் போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த நாகலிங்கம் மகன் ஜெனித் ராஜ் (33) என்பது தெரியவந்தது. இதையடுத்து சங்கீதா அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெனித் ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

