Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொலை குற்றவாளிக்கு ஜாமீன் ரத்து

ரெட்டிச்சாவடி செப். 29: ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கடலூர், வண்டிப்பாளையம் புதுநகரை சேர்ந்த கரையேறிவிட்டகுப்பம் பகுதியை சேர்ந்த குப்பன் மகன் விஜய் (31) என்பவர் கைதாகி சிறைக்கு சென்று பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.

நீதிமன்ற உத்தரவின்படி நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தவர், திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு கைது நடவடிக்கையின் மூலம் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ரெட்டிச்சாவடி காவல் நிலைய வழக்கில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட்டு வந்தவர் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திடாமல் திருப்பதிரிப்புலியூர் காவல் நிலைய ஆதாய கொலை வழக்கில் சிறைக்கு சென்றுவிட்டதால், ரெட்டிச்சாவடி காவல் ஆய்வாளர் பிரேம்குமார் விஜய்யின் நிபந்தனை ஜாமீன் ரத்து செய்ய கோரி கடலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் -IIல் மனுதாக்கல் செய்தார். அதன்படி நீதிபதி, விஜய்யின் நிபந்தனை ஜாமீன் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.