Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

திண்டிவனத்தில் நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் திடீர் சாலை மறியல்

மயிலம், ஆக. 29: ஜக்காம்பேட்டையில் அமைந்துள்ள திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முன்பு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வழக்கறிஞர்கள் சாலையில் அமர்ந்து திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம், கடலூர் ஆகிய இரண்டு மாவட்டத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் விழுப்புரத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தை திருவண்ணாமலைக்கு மாற்ற உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர்கள் அனைவருக்கும் பாதகமான உத்தரவாகும்.

நுகர்வோர் நீதிமன்றம் தற்போது இருக்கும் நிலையிலேயே விழுப்புரத்திலேயே செயல்பட வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்றப் பணிகளில் இருந்து விலகி இருப்பது என முடிவு செய்து ஜக்காம்பேட்டையில் உள்ள திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வழக்கறிஞர்கள் சுமார் 20 பேர் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியல் ஈடுபட்டனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலம் போலீசார் வழக்கறிஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். திடீரென வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.