Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கடலூரில் அம்மன் கோயில் குளத்தில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது

கடலூர், அக். 28: கடலூர் அடுத்த கே.என்.பேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோயில் குளத்தைத் தூர்வாரி சுத்தப்படுத்தி அழகுபடுத்துவதுடன், குளத்தைச் சுற்றிலும் தடுப்புச்சுவர், நடைபாதை மற்றும் மின்விளக்குகள் அமைத்துத் தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து என்.எல்.சி. நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு நிதி மூலம் ரூ.48 லட்சத்து 73 ஆயிரம் செலவில் குளத்தைச் சீரமைக்கும் பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.ஊரக வளர்ச்சித் துறை மூலம் தவெக நிர்வாகியுமான மலைச்சிங்கம் என்ற காசிநாதன் மூலம் கடந்த 25 நாட்களுக்கு முன்பு பணிகளை துவங்கினார். தற்போது சுமார் 40 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாகப் பெய்த கனமழையால் குளத்தில் புதிதாகக் கட்டப்பட்டிருந்த தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. பணிகள் தொடங்கப்பட்டு 25 நாட்களே ஆன நிலையில், தடுப்புச்சுவர் இடிந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, நேற்று பணிகள் நடந்தபோது அங்கு திரண்டமக்கள், கட்டுமானப் பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுவதாகக் குற்றம்சாட்டி, ஒப்பந்ததாரர் காசிநாதனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா மற்றும் திருப்பாதிரிப்புலியூர் பேச்சு நடத்தி தரமான முறையில் கட்டுமானப் பணிகள் நடைபெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.