Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தியாகதுருகம் அருகே பைக் மீது சரக்கு வாகனம் மோதி 2 வாலிபர்கள் பரிதாப பலி

தியாகதுருகம், செப். 28: பைக் மீது சரக்கு வாகனம் மோதியதில் ஒரே கிராமத்தை சேர்ந்த 2 நண்பர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள சித்தலூர் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு மகன் அன்பரசன்(20), கிணறு வெட்டும் தொழிலாளி. அதே கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் மகன் ராவுத்தர்(22), கூலி தொழிலாளி. நண்பர்களான இருவரும் நேற்றுமுன்தினம் இரவு தியாகதுருகம் வார சந்தைக்கு சென்று காய்கறிகள் வாங்கி கொண்டு மீண்டும் தங்களது வீட்டிற்கு பைக்கில் சித்தலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். பானையங்கால் அருகே சென்றபோது, சித்தலூர் கிராமத்தில் இருந்து பால் ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு வாகனம் ஒன்று, பைக் மீது மோதியது, இதில் ராவுத்தர், அன்பரசன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்த தியாகதுருகம் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக உளுந்தூர்பேட்டை சுந்தரவாண்டி கிராமத்தை சேர்ந்த சரக்கு வாகன டிரைவர் தர்மா மீது தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தை சேர்ந்த இரண்டு வாலிபர்கள் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.