Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வயலில் போதிய ஈரப்பதம் இல்லாததால் காட்டுமன்னார்கோவில் பகுதியில் நெல் விதைகள் முளைக்காமல் பாதிப்பு

காட்டுமன்னார்கோவில்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், குமராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் போதிய ஈரப்பதம் இல்லாததால் விதைகள் முளைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாய தேவைக்காக வடக்கு ராஜன் வாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழையை எதிர்பார்த்து நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டு 16 முதல் 25 நாட்கள் கடந்துள்ள நிலையில், போதிய மழை பெய்யாததால் பல வயல்களில் விதைகள் முளைக்காமலும், சில இடங்களில் முளைத்த பயிர்கள் கருகும் நிலையிலும் உள்ளதாக நேற்று நடைபெற்ற வேளாண்மைத்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட பிள்ளையார் தாங்கள், கூத்தூர், உடையூர், நடுத்திட்டு உள்ளிட்ட 9 கிராமங்களிலும் பயிர்களை காப்பாற்ற வடக்கு ராஜன் வாய்க்காலில் தொடர்ந்து 6 நாட்களுக்கு விநாடிக்கு 350 கனஅடி தண்ணீர் வழங்கினால், அனைத்து வயல்களுக்கும் உயிர் தண்ணீர் பாசனம் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வடக்கு ராஜன் வாய்க்கால் உள்ளிட்ட பாசன வாய்க்கால்களில் விவசாய தேவைக்கு போதிய அளவு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.நேரடி விதைப்பு செய்தும் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் முளைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதால், தங்களது சாகுபடி செலவு வீணாகிவிடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.