Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

விழுப்புரம் அருகே கஞ்சா விற்க முயன்ற வாலிபர்கள் கைது

விழுப்புரம், ஜூலை 27: விழுப்புரம் அருகே வளவனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோலியனூர் கூட்டுரோடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின் பேரில் வளவனூர் போலீசார் நேற்று மாலை ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனையிட்டபோது அவர்களிடம் 2 கிலோ 400 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணையில் விழுப்புரம் அருகே மாங்குபவத்தைச் சேர்ந்த சூர்யா(27), புதுச்சேரி முருங்கப்பாக்கம் பன்னீர்செல்வம்(25) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களிடம் விசாரித்த போது அப்பகுதியில் கஞ்சா விற்க முயன்றதை போலீஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து இரண்டு பேரையும் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.