Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

உளுந்தூர்பேட்டை அருகே மின்கசிவு காரணமாக வீட்டில் தீ விபத்து

உளுந்தூர்பேட்டை, ஆக. 26: மின்கசிவு காரணமாக வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அஜிஸ்நகர் கிராமத்தில் வசித்து வருபவர் அரவிந்தன். இவருடைய வீட்டில் நேற்று யாரும் இல்லாத நேரத்தில் திடீரென வீட்டின் ஒரு பகுதியில் இருந்த மின் மீட்டர் ஒயர்கள் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த தீ அருகில் உள்ள குளிர்சாதன பெட்டி மற்றும் நீர் மின் மோட்டார் ஆகியவைகளில் அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்ததால் வீட்டில் இருந்து கடும் புகை மூட்டம் ஏற்பட்டது.

இதனை பார்த்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.