Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

நெல்லிக்குப்பம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு தர்ம அடி

நெல்லிக்குப்பம், ஜூன் 23: 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் விஜய கணபதி(27). இவர் வீட்டின் வெளியே தனியாக விளையாடி கொண்டிருக்கும் 4ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமியிடம் அடிக்கடி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி, தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்கள், அப்பகுதி பொதுமக்களுடன் விஜய கணபதியிடம் சென்று விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் விஜய கணபதியை பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

தகவலறிந்த போலீசார், விஜய கணபதியிடம் விசாரணை நடத்தினர். மேலும் கடலூர் மாவட்ட சிங்கப் பெண் அதிரடி படை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் விஜய கணபதி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதுகுறித்து சிங்கப்பெண் அதிரடிப் படை போலீசார், விஜய கணபதியை கைது செய்து, பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.