Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தவெக...வா? தவாக...வா? ஒண்ணுமே புரியல; அமைச்சரவையில் இடம் கொடுத்த தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு நன்றி: விசிக தொண்டர்களின் கோஷத்தால் பரபரப்பு

விழுப்புரம், மே 23: தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள தவெக அமைச்சரவையில் நேற்றையதினம் விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கட்சிக்கு தலா ஒரு இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தனி தொகுதியில் வெற்றிபெற்ற வன்னியரசு எம்எல்ஏ நேற்று அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதனை வரவேற்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விசிக நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்டவளாகம் எதிரே நகரவிசிக சார்பில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

அப்போது அவர்கள் கோஷம் எழுப்பிய நிலையில் அமைச்சர் பதவி வழங்கிய தமிழக வாழ்வுரிமைக்கட்சிக்கு நன்றி என்று கூறி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த நிர்வாகி ஒருவர் திடீரென்று சுதாரித்து தமிழக வெற்றிக்கழகம் என்று கூறும்படி சொல்லவே அதனை திருத்தி தமிழக வெற்றிக்கழகம் என்று கோஷமிட்டனர். தவெகவா?, தவாகவா என்று ஒன்னுமே புரியல அதான் நாங்கள் குழம்பிபோயிட்ேடாம் என்று கூறி விசிகவினர் தங்கள் கொண்டாட்டத்தை சீக்கிரமாக முடித்துக்கொண்டு நடையை கட்டினர்.