Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தடைக்காலம் முடிந்து ஞாயிற்றுக்கிழமையான நேற்று மீன் வாங்க குவிந்த மக்கள்

கடலூர், ஜூன் 22: கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம், சோனங்குப்பம், அக்கரைகோரி, சிங்காரத்தோப்பு தாழங்குடா உள்ளிட்ட மீனவர் கிராமங்களில் இருந்து ஏராளமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர். இவர்கள் பிடித்து வரும் மீன்கள் கடலூர் துறைமுகம் பகுதியில் செயல்பட்டு வரும் மீன் விற்பனை தளத்துக்கு கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். இதனை கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநில வியாபாரிகள் மற்றும் உள்ளூர் வியாபாரிகள், பொதுமக்கள் ஏலம் எடுத்து வாங்கி செல்கின்றனர்.

மீன்பிடி தடைக்காலம் சென்றவாரம் முடிந்து மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று அசைவ பிரியர்கள் மீன் வாங்குவதற்கு கடலூர் முதுநகர் துறைமுகத்திற்கு வந்து மீன்கள் வாங்கிச் சென்றனர். மீன்பிடி தடைக்காலம் முடிந்த பின்பும் மீன்களின் விலை குறையாமல் உள்ளது. ஒரு கிலோ வவ்வால் மீன் ரூ.600க்கும், தேங்காய் பாறை ரூ.600க்கும், சங்கரா ரூ.500க்கும், நண்டு ரூ.500க்கும், கனவா ரூ.200க்கும், கிளி மீன் ரூ.200க்கும், கவலை மீன் ரூ.200க்கும் விற்பனை செய்யப்பட்டது.