Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கொத்தனார் வீட்டில் பணம், வெள்ளி கொலுசு திருட்டு

வானூர், ஜூன் 22: வானூர் தாலுகா பெரம்பை கிராமத்தை சேர்ந்தவர் வேலு, கொத்தனார். இவரது மனைவி சுதா. இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் கட்டிட வேலைக்கு சென்று விட்டனர். பிள்ளைகள் இருவரும் பள்ளிக்கு சென்றிருந்தனர். பின்னர் மீண்டும் மாலையில் வீடு திரும்பிய சுதா வீட்டின் முன்பக்க கதவை திறந்தபோது திறக்க முடியவில்லை. உடனடியாக கணவர் வேலுக்கு போன் செய்து அழைத்துள்ளார். அவர் வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த இரும்பு பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 250 கிராம் வெள்ளி கொலுசு ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சுதா, ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து இத்திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.