Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சின்னசேலம் அருகே பொறியியல் பட்டதாரி விஷம் குடித்து சாவு

சின்னசேலம், மே 22: விஷம் குடித்து பொறியியல் பட்டதாரி வாலிபர் உயிரிழந்தார். சின்னசேலம் அருகே உள்ள வி.பி.அகரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்(61), விவசாய தொழிலாளி. இவருக்கு அன்பழகன், அறிவழகன்(28) என்ற இரு மகன்களும், அபிராமி என்ற மகளும் உள்ளனர். இதில் அன்பழகன், அபிராமி இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. அறிவழகன், பொறியியல் படிப்பு படித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டிற்கு வந்த அறிவழகன், 10.30 மணியளவில் வாயில் நுரை தள்ளியபடி வீட்டில் படுத்திருந்தார். இதை பார்த்து அவரது தந்தை விசாரித்தபோது விஷம் குடித்துவிட்டதாக கூறி உள்ளார். இதையடுத்து உறவினர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இது குறித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.