Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தீ விபத்தில் 6 ஆடுகள், 26 கோழிகள் கருகின

பாகூர், மே 22: புதுவை மாநிலம் பாகூர் அடுத்த பின்னாச்சிக்குப்பம் சிவகிரி நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன்(42). ஆடு, மாடு, கோழி வைத்து வளர்த்து விவசாயம் செய்து வருகிறார். நேற்றுமுன்தினம் மேய்ச்சலுக்கு சென்றுவிட்டு, கோழி, ஆடு, மாடுகளை கொட்டகையில் வழக்கம் போல் கட்டி வைத்துள்ளார். நள்ளிரவு 12.30 மணியளவில் திடீரென கொட்டகையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென பரவி கொட்டகை முழுவதும் பரவியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தண்ணீரை ஊற்றி அணைக்க முயற்சி செய்தனர்.

மேலும் இதுகுறித்து பாகூர் தீயணைப்பு நிலையம், பாகூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் கொட்டகையில் இருந்த 6 ஆடு, 26 கோழிகள், ஒரு பழைய மோட்டார் சைக்கிள் தீயில் கருகியது. போலீசாரின் விசாரணையில் கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் எரிந்து தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து பாகூர் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.