Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிளஸ் 2 மாணவியை தூக்கி சென்று தாலி கட்டிய தொழிலாளி போக்சோவில் கைது

கள்ளக்குறிச்சி, மே 20: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்த 17வயதான பிளஸ் 2 மாணவி தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வி படிக்க தயாராகி வந்தார். இந்நிலையில் கடந்த 16ம்தேதி வழக்கம்போல் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டனர். வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த சின்னசேலம் அருகில் உள்ள கருங்குழி கிராமத்தை சேர்ந்த ஆண்ணாமலை மகன் முனீஸ்வரன் (40) கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று மாணவி வீட்டிற்குள் புகுந்து மாணவியை கட்டிப்பிடித்ததாகவும், இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி யாராவது காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டுள்ளார். அதனை பொருட்படுத்தாமல் முனீஸ்வரன் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாகவும், இதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்த நிலையில் முனீஸ்வரன் வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு தூக்கி சென்றுள்ளார்.

இதனையடுத்து முனீஸ்வரனின் அக்கா மீனாட்சி, முனீஸ்வரனின் தம்பி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் மாணவிக்கு முனீஸ்வரன் தாலி கடடியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த மாணவி கதறி அழுதுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்ததும் மாணவியின் பெற்றோர் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்ததன் பேரில் முனீஸ்வரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். மேலும் மாணவிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததாக முனீஸ்வரனின் அக்கா மீனாட்சி மற்றும் தம்பி கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.