கள்ளக்குறிச்சி, செப். 18: கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் பாரதிராஜா(42). இவரும், ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள பெண் ஒருவரும் குடும்பத்தினரை பிரிந்து கள்ளக்குறிச்சி பகுதியில் கடந்த 9 ஆண்டுகளாக வசித்து வந்தனர். இவர்களுடன் அந்த பெண்ணின் 14 வயது மகளும் வசித்து வருகிறார். இந்த சிறுமி கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
மாணவியின் தாய் கூலி வேலைக்காக கேரளா மாநிலம் சென்றுள்ளார். இந்நிலையில் மாணவி வீட்டில் இருந்தபோது பாரதிராஜா மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறபடுகிறது. மேலும் இது பற்றி வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் தெரிகிறது. இது குறித்து மாணவி, கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் போக்சோவில் வழக்கு பதிவு செய்து பாரதிராஜாவை கைது செய்தனர்.


