கள்ளக்குறிச்சி, செப். 18: கள்ளக்குறிச்சி அருகில் உள்ள மோகூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் மனைவி சரஸ்வதி(54). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தபோது அந்த வழியாக நடந்து வந்த மர்ம நபர்கள் 3 பேர், சரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த 6.5புவு்ன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பினர். இது குறித்து சரஸ்வதி, கள்ளக்குறிச்சி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர்கள் பறித்து சென்ற நகையின் மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் ஆகும்.
+
Advertisement


