உளுந்தூர்பேட்டை, அக். 17: உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி சுங்கச்சாவடி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியாக உள்ளது. ஆயுத பூஜையை முன்னிட்டு 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் சென்னையில் இருந்து கார் உள்ளிட்ட வாகனங்களில் திருச்சி, மதுரை, தஞ்சாவூர், நாகர்கோவில், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்வதால் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்பட்டு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. உளுந்தூர்பேட்டை டோல்கேட் பகுதியில் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
+
Advertisement


