Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

விநாயகர் சிலையுடன் ஒன்றரை பவுன் செயினை ஆற்றில் வீசிய முதியவர்

கடலூர், செப். 17: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த திங்கள்கிழமையன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும், பொது இடங்களிலும் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை 3ம் நாளான நேற்று கடற்கரை, ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைத்தனர்.இந்நிலையில் நேற்று கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள உப்பனாறு பாலத்தில் பொதுமக்கள் பலர் தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை முறைப்படி கரைத்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த முதியவர் ஒருவர் தனது வீட்டில் வைத்து வழிபாடு செய்த விநாயகர் சிலையை கரைப்பதற்காக ஆற்றில் வீசினார். பொதுவாக வழிபாட்டின்போது விநாயகர் சிலைக்கு தங்க நகைகளை அணிவித்து விட்டு சிலையை கரைப்பதற்கு முன்பு நகைகளை கழற்றி வைப்பது வழக்கம்.

ஆனால் அந்த முதியவர் சுமார் ஒன்றரை பவுன் தங்க நகையை விநாயகர் சிலைக்கு அணிவித்ததை மறந்து நகையுடன் சிலையை ஆற்றில் வீசிவிட்டார். சிலை தண்ணீருக்குள் சென்ற சில வினாடிகள் ஆன நிலையில் நகையை கழற்றாதது அவருக்கு நினைவுக்கு வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த முதியவர் மற்றும் அவருடன் வந்த 2 பேர் பதற்றத்துடன் உடனடியாக ஆற்றில் இறங்கி நகையை தேட தொடங்கினர். இதுகுறித்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தீயணைப்பு துறை வீரர்கள் ஆற்றில் இறங்கி முதியவர் சிலையை வீசிய பகுதியில் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.