நெல்லிக்குப்பம், செப். 17: நெல்லிக்குப்பம் அடுத்த நடுவீரப்பட்டு மூலக்குப்பம் புதுமனை தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் மகள் மலர்விழி (18). இவர் பி.எஸ்.சி. நர்சிங் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவர் கடந்த 14ம் தேதியன்று திருவந்திபுரத்தில் நடந்த அவரது தோழியின் திருமணத்துக்கு சென்று வருவதாக வீட்டில் பெற்றோர்களிடம் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார். பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது கைபேசியும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது குடும்பத்தினர், அவரை உறவினர்கள் மற்றும் தோழிகளின் வீடுகள் மற்றும் அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர், நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிந்து மாயமான மலர்விழியை தேடி வருகின்றனர்.
+
Advertisement


