Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

16 வயது சிறுமியை காதலித்த வாலிபர் மீது போக்சோ வழக்கு

பண்ருட்டி, ஜூலை 17: 16 வயது பள்ளி மாணவியை காதலித்த வாலிபர் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பண்ருட்டி அருகே உள்ள பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி பிளஸ் 1 படித்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்த கஜி என்ற வாலிபருடன் இவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக பழக்கம் ஏற்பட்டு காதல் வளர்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு பள்ளிக்கு செல்வதாக வீட்டில் இருந்து சென்ற சிறுமி, கஜியின் வீட்டில் இருப்பதாக அவரது தாயாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறுமியின் தாயார், கஜியின் வீட்டிற்கு சென்று சிறுமியை அழைத்து வர முயன்றபோது, கஜி சிறுமியை கட்டிபிடித்து அனுப்ப மறுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் தாயார் சமாதானம் செய்து சிறுமியை அழைத்து வந்து விசாரித்ததில், இருவரும் காதலிப்பதாக சிறுமி தெரிவித்துள்ளார்.இது குறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.