Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கஞ்சா விற்க முயன்ற சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது

புதுச்சேரி, அக். 16: புதுச்சேரி மங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஆண்டியார்பாளையம் ஐயனார் கோயில் வீதியில் மர்ம நபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மர்ம நபர்களை மடக்கி பிடித்து அதிரடியாக சோதனை நடத்தினர். சோதனையில், கஞ்சா இலை மற்றும் கத்தி வைத்திருந்து தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில், நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்த டேனியல், வில்லியனூரை சேர்ந்த காமேஷ், லாஸ்பேட்டை சேர்ந்த அருள்பிராகஷ், எல்லைபிள்ளைச்சாவடியை சேர்ந்த நாகராஜ், வில்லியனூரை சேர்ந்த சச்சின் உட்பட 2 சிறுவர்கள் என்பதும், பணத்துக்காக கஞ்சா வாங்கி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய முயன்றதாக தெரிவித்தனர். இதையடுத்து 7 பேர் மீது கஞ்சா, ஆயுதசட்டம் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிந்து கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்த 45 கிராம் கஞ்சா, 7 செல்போன்கள், 2 கத்திகள் மற்றும் பைக்குகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், சிறுவர்களை சிறுவர் சீர்திருத்தபள்ளியிலும், மற்றவர்களை காலாப்பட்டு மத்திய சிறையிலும் அடைத்தனர்.