Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மேல்மலையனூர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த புதுமணப்பெண் மாயம்

மேல்மலையனூர், ஜூலை 16: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நேற்று முன்தினம் ஆனி அமாவாசையையொட்டி ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் சு.வாளவெட்டி கிராமத்தை சேர்ந்த பரிமளா தனது மகள் திவ்யாவுடன் (21) வந்திருந்தார். சுவாமி தரிசனம் செய்து விட்டு வீடு திரும்பும்போது கூட்ட நெரிசலில் தன் மகள் திவ்யா காணாமல் போனதாக மேல்மலையனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காணாமல் போன மகள் திவ்யாவுக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆன நிலையில் புதுமணப்பெண் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.