Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மயிலம் அருகே ஜெலட்டின் வெடி பொருட்களை பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது

மயிலம், அக். 15: மயிலம் அடுத்துள்ள அவணம்பட்டு கிராமத்தில் ஜெலட்டின் வெடிபொருட்களை மர்ம நபர்கள் சிலர் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் பேரில், நேற்று மயிலம் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவணம்பட்டு கிராமத்தில் தாண்டவராயன் என்பவரது நிலத்தில் சோதனை செய்ததில் ஜெலட்டின் குச்சிகள் 40, ஜெலட்டினை வெடிக்க பயன்படுத்தும் டி-கார்டு காயல் வயர்கள் ஆகிய பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சட்டவிரோதமாக அரசு அனுமதி இன்றி வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்த ஆத்தூர் கிராமம் ஒத்தவாடை தெருவை சேர்ந்த தட்சணாமூர்த்தி மகன் சுப்பிரமணி(46) மற்றும் எலவனாசூர்கோட்டை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் புருஷோத்தமன்(40) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.