Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பர்னிச்சர் உரிமையாளரிடம் ரூ.3.93 லட்சம் மோசடி: சைபர் கிரைம் போலீசார் விசாரணை

புதுச்சேரி, அக். 15: புதுச்சேரி ஆலங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (45). சொந்தமாக பர்னிச்சர் தொழில் நடத்தி வருகிறார். கடந்த 10ம் தேதி மாலை இவரின் செல்போன் எண்ணுக்கு தொடர்ந்து குறுந்தகவல்கள் வந்தது. இதை சங்கர் எடுத்துபார்த்தபோது, அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.95 ஆயிரமும், ரூ.99 ஆயிரமும், ரூ.99 ஆயிரத்து, 764 மற்றும் ரூ.61 ஆயிரத்து 999 என மொத்தமாக ரூ.3.93 லட்சம் ரூபாய் 4 முறை பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சங்கர் இச்சம்பவம் குறித்து புதுச்சேரி சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார், வழக்கை கோரிமேடு காவல் நிலையத்துக்கு மாற்றியுள்ளனர். அதன்பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.