Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

சர்வீஸ் சென்டர் கடையை உடைத்து செல்போன், லேப்டாப் திருட்டு

புதுச்சேரி, ஜூன் 15: புதுச்சேரி முத்தியால்பேட்டை லூர்து நகரை சேர்ந்தவர் அசன் அலி(32). இவர் முத்தியால்பேட் கருவடிக்குப்பம் மெயின் ரோட்டில் உள்ள சர்வீஸ் சென்டரில், சர்வீஸ் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 12ம் தேதி இரவு அசன் அலி கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர், மறுநாள் காலை அவர் வழக்கம்போல் கடையை திறக்க வந்தபோது, கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு, கடையின் கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது கடையில் சர்வீசுக்கு கொடுக்கப்பட்டிருந்த ஐபோன்- 1, ஆப்பிள் ஏர்பாட்ஸ் 2 , லேப்டாப் -2, செல்போன்- 1 ஆகியவை திருடு போயிருந்தது. இது குறித்து அசன் அலி முத்தியால்பேட் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். மேலும், தடவியல் நிபுணர்கள வரழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இது குறித்து அசன் அலி அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிந்து, அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.