Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வில்லியனூரில் வாலிபரை கத்தியால் வெட்டி கொலை மிரட்டல்: போலீசார் விசாரணை

புதுச்சேரி, அக். 14: வில்லியனூர் மல்லிகா தியேட்டர் வீதி சாமியார்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் மகன் மதன் (21). இவரது தாயார் செல்வி, வில்லியனூர் கணுவாப்பேட்டை பகுதியில் மீன் கடை வைத்துள்ளார். அந்த கடையில் தாயாருடன் சேர்ந்த மதனும் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவியின் வீட்டிற்கு, அவருடன் படிக்கும் பூமியான்பேட்டை பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளாராம். இதனை மதன் கண்டித்துள்ளார். இதனால் அந்த மாணவி, மதனுடன் பேசுவதை தவிர்த்து வந்தாராம்.

இந்நிலையில் கடந்த 11ம் தேதி கல்லூரி மாணவியின் வீட்டிற்கு பிரவீன் வந்து சென்றபோது, அவரிடம் மதனின் நண்பர்கள் பிரேம், விஷால் ஆகியோர் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் அதிகாலை பிரவீனின் தம்பி நவீன் சிலருடன் மதன் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். அப்போது, நவீன் மறைத்த வைத்திருந்த கத்தியை எடுத்து மதனின் கழுத்து மற்றும் தலையில் வெட்டியுள்ளார்.

மேலும் தன்னுடைய அண்ணனிடம் பிரச்னை செய்தால் வெட்டி கொலை செய்துவிடுவேன் என மிரட்டல் விடுத்துவிட்டு சென்றுள்ளார். இதில் காயடைந்த மதன் புதுவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.