Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கடலூரில் 5 கிலோ கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

கடலூர், அக். 14: கடலூர் மாவட்டத்தில் மதுக்கடத்தலை தடுக்கும் பொருட்டு, மாவட்ட எஸ்பி விவேகானந்தா சுக்லா உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடலூர் முதுநகர் துறைமுகம் ரயில் நிலையம் தண்ணீர் தொட்டி அருகில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 3 நபர்களை பிடித்து சோதனை செய்ததில், அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், திருப்பதிக்கு சென்று வரும் போது விற்பனைக்காக ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்ததாகவும் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி பகுதியைச் சேர்ந்த தனசேகர் மகன் சௌந்தர் (36), ஈரோடு ஓடை குடசை பெருமாள் காலனி பகுதியைச் சேர்ந்த ஷாகுல் மகன் ஜாபர் ஷெரீப் (32), ஈரோடு பழைய ரயில்வே ஸ்டேஷன் பகுதியைச் சேர்ந்த சபியுல்லா மகன் கெய்சர் (26), ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். கஞ்சா குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினரை மாவட்ட எஸ்பி பாராட்டினார்.