Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

57 பெண் எஸ்ஐக்கள் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு: டிஜிபி உத்தரவு

விழுப்புரம், ஜூலை 14: தமிழகம் முழுவதும் 57 பெண் உதவி ஆய்வாளர்களை இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு மற்றும் பணி நியமனம் செய்து டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக காவல்துறையில் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் காவல்துறையின் பல்வேறு பிரிவுகளில் உதவி ஆய்வாளர்களாக பணியாற்றி வந்த 57 பெண் உதவி ஆய்வாளர்களுக்கு இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்கி தமிழக காவல்துறை டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, பதவி உயர்வு பெற்ற 57 பெண் இன்ஸ்பெக்டர்கள் அவர்கள் வகித்து வந்த பதவியில் இருந்து இன்ஸ்பெக்டர்களாக பதவி நியமனம் செய்யப்பட்ட பணியிடங்களுக்கு உடனே பணியில் சேருமான உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி பதவி உயர்வு பெற்ற 57 பெண் இன்ஸ்பெக்டர்களும் சைபர் க்ரைம், குற்றப்பிரிவு, சென்னை மாநகர காவல்துறை, நுண்ணறிவு பிரிவு, தெற்கு மண்டலம், ரயில்வே, வடக்கு மண்டலம், தாம்பரம் காவல்துறை, சிபிசிஐடி, மத்திய மண்டலம் ஆவடி காவல்துறை, மாநில குற்ற ஆவணம் காப்பகம் என பல்வேறு பிரிவுகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.