Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம் நேரில் பார்த்த கணவர் தற்கொலை

விழுப்புரம், மே 12: வீட்டில் யாரும் இல்லாதபோது கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசமாக இருந்ததை பார்த்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் அருகே கண்டம்பாக்கத்தை சேர்ந்தவர் 25 வயது வாலிபர். கூலி வேலை செய்து வந்தார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 5 மற்றும் 2 வயதில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் இளம்பெண்ணுக்கும், திருமண மண்டப மேலாளர் லோகேஷ் (24) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை அறிந்த அந்த பெண்ணின் கணவன் கண்டித்துள்ளார். நேற்றுமுன்தினம் இரவு கணவன் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது மனைவி, கள்ளக்காதலன் லோகேஷ் ஆகிய இருவரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார். அவர்களை பிடித்து தட்டிகேட்டபோது அவரது மனைவி, ‘‘அப்படித்தான் இருப்போம், நீ போய் சாவு’’ என்று கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த கணவன் கண்டியமடை சுடுகாடு அருகே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது சகோதரர் அளித்த புகாாரின்பேரில் கள்ளக்காதல் ஜோடி மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.