Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

நெல்லிக்குப்பம் அருகே தூக்குபோட்டு வாலிபர் சாவு செஞ்சியை சேர்ந்தவர்

நெல்லிக்குப்பம், மே 12: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த கப்பசொரத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜாபர் அலி மகன் உசேன்(22), கூலி தொழிலாளி. திருமணம் ஆகவில்லை. இவர் நெல்லிக்குப்பம் அருகே வெள்ளகேட் பகுதியில் பிளாட் போடும் நிறுவனத்தில் வேலை செய்வதற்காக நண்பர்கள் மூலம் கடந்த வாரம் வேலை கேட்டுள்ளார். அதன் பேரில் கடந்த 3 நாட்களுக்கு முன் செஞ்சியில் இருந்து புறப்பட்டு வந்து வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் வெள்ளகேட்டில் உள்ள கிளினிக் மேல் தளத்தில் வாடகைக்கு இருந்த ரூமில் மின் விசிறியில் தூக்கிட்டு இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுமணி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உசேனின் சடலத்தை மீட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.