Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

விழுப்புரம் காவல்நிலையம் அருகே சூதாடிய கும்பல் அதிரடி கைது 2 பைக்குகள், பணம் பறிமுதல்

விழுப்புரம், மே 12: விழுப்புரம் அருகே சூதாடிய கும்பலை போலீசார் கைது செய்து பைக், பணம் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விழுப்புரம் மேற்குகாவல்நிலையம் அருகே உள்ள ஜிஆர்பி தெருவை சேர்ந்த சக்தி என்பவரின் வீட்டின் அருகில் பணம் வைத்து ஒருகும்பல் சூதாடுவதாக வந்த புகாரின்பேரில் போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது சூதாடிக்கொண்டிருந்த கும்பலை சுற்றிவளைத்து கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் டி.பனப்பாக்கம் கணேசன்(50), வழுதரெட்டி சுரேஷ்(40), சோழம்பூண்டி சிவபிரகாஷ்(24) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் 2 பைக்குகள், ரூ.9,500 ரொக்கபணம், சூதாட்டதாள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய அதேபகுதியை சேர்ந்த சக்திவீரன் என்பவரை தேடி வருகின்றனர்.