சேத்தியாத்தோப்பு, செப். 11: கடலூர் மாவட்டம் சோழத்தரம் புதுதெருவை சேர்ந்தவர் தனபால் மகன் பாலகுமார்(29). இவர் கடந்த 2023ம் ஆண்டு 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.இவ்வழக்கு விசாரணை கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளிக்கு 27 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.17000 அபராதமும் விதித்து நீதிபதி குலசேகரன் தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து பாலகுமாரை போலீசார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வழக்கை சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த காவல் அதிகாரிகளை மாவட்ட எஸ்பி விவேகானந்தா சுக்லா பாராட்டினார்.


