Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

விவசாயிகளுக்கு அபராதம்

கடலூர், ஜூன் 11: கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 1 முதல் 45 வரை உள்ள வார்டுகளில் சுற்றித்திரிந்த மாடுகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்கள் வரப்பெற்றதை தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் கிஷன்குமார் உத்தரவின் பேரில் மாநகர் நல அலுவலர் தலைமையில் துப்புரவு அலுவலர், துப்புரவு ஆய்வாளர், துப்புரவு பணி மேற்பார்வையாளர் உதவியுடன் வெள்ளி கடற்கரை பகுதியில் 2 மாடுகள் பிடிக்கப்பட்டு மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் தலா ரூ.500/- வீதமும், திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெரு, திருவரசன் பிள்ளை தோட்டம் ஆகிய பகுதிகளிலிருந்து மேலும் 2 மாடுகள் பிடிக்கப்பட்டு தலா ரூ.500/- என 4 மாடுகளுக்கு ரூ.2000/- அபராதம் விதித்தும், இதுபோன்று வெள்ளிக்கடற்கரை பகுதி, பிற சாலைகள், பேருந்து நிலையம், பூங்காக்கள் மற்ற பொது இடங்களில் தொடர்ந்து மாடுகளை திரிய விட்டால் மாட்டின் உரிமையாளர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் கிஷன் குமார் தெரிவித்துள்ளார்.