Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

என்டிஏ கூட்டம், நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி, ஜூன் 11: நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ரங்கசாமி இம்முறையும் டெல்லி செல்லவில்லை என அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் நேற்று நடந்த என்டிஏ கூட்டணி முதல்வர்கள் கூட்டத்தையும் புறக்கணித்துள்ளார்.டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்து 12 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையிலும் பிரதமர் மோடி, இந்தியாவின் நீண்ட காலம் தொடர்ந்து பதவியில் இருக்கும் பிரதமர் என்ற சாதனை படைத்துள்ளார். இதையொட்டி டெல்லி பாரத் மண்டபத்தில் என்டிஏ கட்சிகளின் கூட்டம் நேற்று நடந்தது.

இதில் என்டிஏ கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள், மாநில முதல்வர்கள், பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக உயர் மட்டத் தலைவர்களும் பங்கேற்றனர். புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி 2 வது முறையாக ஆட்சியை அமைத்துள்ளது. ஆனால் தேர்தலில் வென்ற பிறகு முதல்வர் ரங்கசாமி டெல்லி செல்லவில்லை.இந்நிலையில் என்டிஏ தலைவராக புதுச்சேரியில் உள்ள முதல்வர் ரங்கசாமி இக்கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார். அத்துடன் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர்.தமிழக முதல்வர் விஜய் இக்கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி கடந்த பல ஆண்டுகளாக பங்கேற்பதில்லை. முதல்வர் ரங்கசாமி இக்கூட்டத்தில் பங்கேற்க விமான டிக்கெட் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. முக்கியமான நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர்கள் பங்கேற்க ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியும் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்ற முடிவை ரங்கசாமி எடுத்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.