Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 7 பெண்களுக்கு வாந்தி மயக்கம்: அரசு மருத்துவமனையில் அனுமதி

விருத்தாசலம், அக். 10: கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள ஒரு கடையில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு கடையின் எதிரே உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இருந்து தினசரி மதிய உணவு வாங்கி வழங்குவது வழக்கம்.

வழக்கம்போல் நேற்று மதியமும் அந்த ஹோட்டலில் இருந்து உணவு வரவழைக்கப்பட்டு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. அப்போது உணவருந்திக் கொண்டிருந்த ஊழியர்கள் சிலர், சாம்பாரில் பல்லி ஒன்று இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட சில பெண் ஊழியர்களுக்கு அடுத்தடுத்து திடீரென வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கடை நிர்வாகத்தினர், உடனடியாக 108 ஆம்புலன்ஸை வரவழைத்து, பாதிக்கப்பட்டவர்களை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 7 பெண் ஊழியர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஹோட்டல் உணவில் பல்லி விழுந்ததைச் சாப்பிட்ட கடை ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இச்சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.