Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தீயில் கருகிய பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தவளக்குப்பம், அக் 9: புதுச்சேரி தவளக்குப்பம் ராஜாராம் நகர் முல்லை வீதியை சேர்ந்தவர் சிவாஜி (46), பெயிண்டர். இவரது மனைவி சவிதா என்ற ஓஸாரம்மாள் (39). இவர்களுக்கு 18 மற்றும் 9 வயதில் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் 27ம் தேதி சிவாஜி குளிப்பதற்காக விறகு அடுப்பு மூலம் வெந்நீர் வைத்து கொடுக்க சவிதா அடுப்பை பற்ற வைத்தார். அடுப்பு சரியாக எரியாததால் வீட்டில் பெயிண்டில் கலப்பதற்காக வைத்திருந்த தின்னரை ஊற்றி பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக சவிதா மீது தீப்பற்றியது.

இதனால் அலறி துடித்த அவரை மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு பொது மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டவர், அங்கு நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து சிவாஜி, தவளக்குப்பம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஏஎஸ்ஐ ராஜா மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.