Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மது விற்ற பிரபல ரவுடி கைது

வடலூர், செப். 9: வடலூரில் கள்ளத்தனமாக மது பாட்டில்களை விற்பனை செய்து வந்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். வடலூர் சத்திய ஞான சபை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக வடலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், வடலூர் காவல் ஆய்வாளர் சுரேஷ் தலைமையில், உதவி ஆய்வாளர் மகேஷ் மற்றும் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, வடலூர் கோட்டக்கரை நாயுடு தெருவை சேர்ந்த சுப்பு மகன் சதீஷ் என்பவர், இருசக்கர வாகனத்தில் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, சதீஷைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து 12 குவார்ட்டர் பாட்டில்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சதீஷ் மீது வடலூர் காவல் நிலையத்தின் குற்றச் சரித்திரப் பதிவேட்டில் இடம்பெற்றுள்ள ரவுடி என்பது குறிப்பிடத்தக்கது.