சிதம்பரம், செப். 9: சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தில்லை காளியம்மன் கோயிலில் நேற்று உண்டியல்கள் திறந்து பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்டது. கடலூர் உதவி ஆணையர் சிவகுமார் தலைமையில், செயல் அலுவலர் நரசிங்க பெருமாள், ஆய்வாளர் சீனிவாசன் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணியில் 20க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதில், ரூ.15 லட்சத்து 68 ஆயிரத்து 489ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் 47.100 கிராம் தங்கம், 45.500 கிராம் வெள்ளி, வெளிநாட்டு நோட்டுகள் மலேசியா 1 ரிங்கட்- 10, மலேசியா 5 ரிங்கட் - 2, மலேசியா 10 ரிங்கட் 5, சவுதி அரேபிய 1 ரியால் 5, சவுதி அரேபிய 5 ரியால் - 1, யுஎஸ்ஏ 1 டாலர் 2 ஆகியவைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
+
Advertisement


