காட்டுமன்னார்கோவில், செப். 9: காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டை வடக்கு கொளக்குடி பகுதியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது மகன் முகம்மது நிவாசுதீன்(29). இவர் லால்பேட்டை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் கேஷியராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்த தஸ்பிஹா பீவி (18) என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டு முகம்மது நிவாசுதீன் வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் மனைவி தஸ்பிஹா பீவியை காணாததால் அதிர்ச்சியடைந்தார். பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.இது குறித்து முகம்மது நிவாசுதீன் காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஒரு மாதமே ஆன நிலையில் புதுப்பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
+
Advertisement


