Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

போதையில் தகராறு: 12 பேர் கைது

புதுச்சேரி, அக். 8: புதுச்சேரி ரெட்டியார்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பிச்சைவீரன்பேட் பகுதியில் நேற்று முன்தினம் ஆசாமி ஒருவர் மதுபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகவலறிந்த சேதராப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த ஆசாமியை பிடித்து விசாரித்தனர். அதில், அதே பகுதியைச் சேர்ந்த பரமலிங்கம் (41) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.

இதேபோல் காலாப்பட்டு, மங்கலம் ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தலா ஒரு நபர், முதலியார்பேட்டை, தவளக்குப்பம், கிருமாம்பாக்கம் ஆகிய காவல் நிலைய பகுதிகளில் தலா 2 பேர், பாகூர் பகுதியில் 3 பேர் என புதுவை முழுவதும் 12 பேரை குடிபோதையில் தகராறு செய்ததாக போலீசார் கைது செய்தனர்.