பண்ருட்டி, அக். 8: பண்ருட்டி மதுவிலக்கு போலீசார் சாஸ்தாநாதன், பிரகாஷ் ஆகிய இருவரும் கண்டரக்கோட்டை சோதனை சாவடியில் மதுவிலக்கு தொடர்பாக வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அவ்வழியாக வந்த பைக்கை நிறுத்துமாறு போலீசார் கூறியுள்ளனர். ஆனால் அந்த நபர் வாகனத்தை நிறுத்தாமல் தப்பி சென்றுள்ளார்.
போலீசார் துரத்தி சென்றபோது அவர் பைக்கை விட்டுவிட்டு தப்பி ஓடினார். அதில் இருந்த கருப்பு நிற பையில் சில்வர் கலர் வாட்ச், பவர் பேங்க், ஏர்போட்ஸ் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. இவற்றை போலீசார் கைப்பற்றினர். இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்.


