Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கோட்டக்குப்பம் அருகே பயங்கரம்; பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர் வெட்டி படுகொலை: 4 பேர் கும்பல் வெறிச்செயல்

காலாப்பட்டு, செப். 8: கோட்டக்குப்பம் அருகே பொம்மையார்பாளையத்தில் பிறந்தநாள் கொண்டாடிய வாலிபரை 4 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் சென்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பழனி என்பவரது மகன் கோவிந்தராஜ் (எ) அஜித் (25). இவர் புதுச்சேரி-சென்னை இசிஆர் சாலையில் பொம்மையார்பாளையத்தில் ஒரு தங்கும் விடுதியை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தங்கும் விடுதி எதிரே உள்ள வாலிபால் மைதானத்தில் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

அப்போது அருகில் பொம்மையார்பாளையம் பகுதியை சேர்ந்த வேறு சிலர் மதுபோதையில் ஒருவரை ஒருவர் தாக்கி சண்டை போட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர்களை அஜித் விலக்கிவிட்டு கண்டித்துள்ளார். அதில் ஒருவரை அஜித் எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது. பிறகு சிறிது நேரத்தில் தனது விடுதிக்கு சென்ற அஜித்தை 4 பேர் கொண்ட கும்பல் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி உள்ளது. இதில் பலத்த காயமடைந்த அஜித் தங்கும் விடுதியில் இருந்து வெளியே ஓடி வந்து கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் கீழே விழுந்துள்ளார்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய அஜித்தை, தகவலறிந்து அங்கு வந்த கோட்டக்குப்பம் போலீசார் மீட்டு கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அஜித்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் அஜித் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் பொம்மையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மருத்துவமனையில் குவிந்தனர்.

இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொம்மையார்பாளையத்தில் பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.