சிதம்பரம், செப். 8: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற நடராஜர் கோயிலில், நேற்று காலை புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் சாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்தார். முன்னதாக கீழ சன்னதி வழியாக தனது குடும்பத்தினருடன் கோயிலுக்கு வந்த ஆளுநருக்கு, கோயில் பொது தீட்சிதர்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை செய்து அழைத்து சென்றனர்.
அதனை தொடர்ந்து கோயில் கனக சபையில் ஏறி ஆளுநர் தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து ரத்தின சபாபதி அபிஷேக பூஜை தரிசனம் செய்தனர். பின்னர் தில்லை கோவிந்தராஜ பெருமாள், தாயார் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளில் சாமி தரிசனம் செய்து சென்றனர்.


