புதுச்சேரி, செப். 8: புதுச்சேரி வில்லியனூர் மூர்த்தி நகரை சேர்ந்தவர் அருண் (28), ஆட்டோ ஓட்டுநர். இவர் நேற்று முன்தினம் காலை சங்கராபரணி ஆற்றங்கரையோரம் இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது, ஆற்றின் ஓரமாக ஒருவர் தலைக்குப்புற கிடந்துள்ளார். இதையடுத்து அருண் சென்று பார்த்துபோது அந்த நபர் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அருண் இச்சம்பவம் குறித்து வில்லியனூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்ததன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து அருண் வில்லியனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


