திட்டக்குடி, செப். 7: கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கழுதூர் கிராமத்தை சேர்ந்தவர் சடையமுத்து(31), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு அவரது பைக்கில் வேப்பூரிலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இரவு 8 மணியளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அடுத்துள்ள அரியநாச்சி பஸ் நிறுத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க பைககை நிறுத்தினார். அப்போது அவ்வழியே வந்த தனியார் ஆம்னி பேருந்து பைக் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த சடையமுத்துவை அருகில் இருந்தவர்கள் மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்த புகாரின்பேரில் வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


