Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பரங்கிப்பேட்டையில் கவரிங் நகையை அடகு வைத்து ஏமாற்ற முயன்றவர் கைது

புவனகிரி, செப். 7: பரங்கிப்பேட்டை மெயின்ரோடு பகுதியை சேர்ந்த வினோத்குமார். அந்த பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று இவரது கடைக்கு சிதம்பரம் பள்ளிப்படை பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (40) என்பவர் நகை அடகு வைக்க வந்துள்ளார். தங்க முலாம் பூசப்பட்ட 8 கிராம் கவரிங் நகையை கொடுத்து பணம் கேட்டுள்ளார்.

அப்போது சந்தேகத்தின் பேரில் வினோத்குமார் நகையை சோதனை செய்தபோது அது தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகை என்பது தெரிய வந்தது. இது குறித்து வினோத்குமார், பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து சுரேஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.