Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது

சங்கராபுரம், ஜூன் 6: மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள ராவத்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சியப்பன் மனைவி பெரியாயி (60), இவரது கணவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் சம்பவத்தன்று ராவத்தநல்லூர் கிராமத்தில் உள்ள அலாவுதீன் என்பவரது வீட்டின் திண்ணையில் பெரியாயி படுத்திருந்தபோது அவ்வழியாக வந்த சோழம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகன் அலெக்ஸ் பாண்டியன் (29) என்பவர் மூதாட்டியை பாலியல் தொந்தரவு செய்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெரியாயி வட பொன்பரப்பி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவன்யா வழக்கு பதிவு செய்து அலெக்ஸ் பாண்டியனை கைது செய்தனர். அலெக்ஸ் பாண்டியனுக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.