Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முதல்வர் ரங்கசாமிக்கு பிரதமர் மோடி, அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

புதுச்சேரி, ஆக. 5: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் 76வது பிறந்த நாளை நேற்று கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர். பிரதமர் மோடி, டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் விஜய் ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். தேசிய, மாநில அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பதிவில், புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது அனுபவமிக்க, வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட தலைமையால் புதுச்சேரி மக்கள் பயனடைந்துள்ளனர். அவர் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில் கோரிமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் நேரில் சென்று முதல்வர் ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.அதே போன்று தமிழ்நாடு முதல்வர் விஜய் தொலைபேசியில் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்தார். மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக கிரண் ரிஜிஜு, முதல்வர்கள் அரியானா நயாப் சிங் சைனி, அசாம் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மணிப்பூர் யும்னம் கேம்சந்த் சிங் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சபாநாயகர் அன்பழகன், அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், சிவக்கொழுந்து, ஜிஎன்எஸ் ராஜசேகர், ராஜவேலு மற்றும் எம்எல்ஏக்கள் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அவரது இல்லத்துக்கு சென்று நேரில் வாழ்த்து தெரிவித்தனர். தலைமை செயலர் சரத்சவுகான், டிஜிபி ஷாலினிசிங், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், சீனியர் எஸ்பிக்கள் உள்ளிட்ட பல்வேறு துறை செயலர் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.