Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

மாணவி தூக்கிட்டு தற்கொலை

வானூர், ஆக. 4: வானூர் தாலுகா திருவக்கரை கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி புதுச்சேரி கதிர்காமம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இவர் வீட்டில் இருந்தபோது பெற்றோர்கள் வீட்டிலேயே வைத்திருக்கும் மளிகை கடையில் சென்று அந்த மாணவியை இருக்கும்படி கூறியுள்ளனர். ஆனால் அவர் அங்கு செல்லாததால் பெற்றோர்கள் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் கோபமடைந்த மாணவி வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறியழுதனர். இதுகுறித்து வானூர் போலீசார் வழக்கு பதிந்து பிரேதத்தை கைப்பற்றி கனகசெட்டிக்குளம் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை நடத்தி வருகின்றனர்.